Monday, June 18, 2012



தொடரும்.

முகம்பாராத நட்பிற்கு எழுதப்பட்ட முகவரியிது......
விசாலமான என்மனதில் உன் விலாசத்தை விரும்புகிறேன்...!

எதிர்பார்புகளற்ற மனக்குளத்தில் நம் சிந்தனை பயணங்கள் தொடரட்டும்.
முரண்பட்ட நம் கருத்துக்கள்தான் நம்மை இன்னும்
முழுதாய் புரிந்துக்கொள்ள உதவுகின்றன .....!

நேசமென்பது மனம் சம்மந்தபட்டது என்பதை
முகம்பாராத நம் நட்பு நன்றாக உணர்த்தும்.....!

உன்னிடம் நான் என்னை எதிபார்க்கவில்லை
உன்னிடம் நான் உன்னை எதிர்பார்க்கிறேன்....!

களங்கப்படாத நட்பிற்கு நாம் கருவாய் இருப்போம் ......
இன்னும் எழுதப்படாத இந்த இலக்கணத்தில் நாம் உயிராய் இருப்போம்.


பார்வைகளை பரிமாறிக்கொண்டு பயந்து பயந்து ஏன் பசியாறவேண்டும் ?
நமக்கு பாதைகளாயில்லை....

 நினைவுகளை பரிமாறிக்கொண்டு....
நிகழ்கால எதார்த்தை எதிர்பார்த்து காத்திருப்போம்...!


முற்றுப்புள்ளி வைக்கவே எனக்கு விருப்பமில்லை...

 ஆனால் முடித்தாகவேண்டுமே....?
                 “ தொடரும் “ 
என்ற வார்த்தையோடு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
முகம்பாராத நட்பிற்கு எழுதப்பட்ட முகவரியிது....!


 சின்னஞ்சிறு மழைத்துளியே ...!

சின்னஞ்சிறு மழைத்துளியே ...
என் சிரிப்பினில்...
சிதறி தெறித்த முகில்அழகே ...!
நீ விண்ணிலிருந்து விரைந்தாயோ ..
என் பெண்மனதில் புதுக்கோலம் வரைந்தாயோ ..!
வர்ணங்களை வானில் சிதறவிட்டு ...
சந்தோஷ சந்தங்களை என்னுள் விதைத்தாயோ ..?!
முகிலும்...முகிலும் சரசமாட ..
சிணுங்கல்கள் அது இடியோ ..?!
இடையிடையே மின்னல்கள் ..
அது காதல் உச்சத்தில்...விளைந்த முத்தத்தில்
 இரவு வெட்கத்தில் சிரிக்கும்....
பெண்மையின் விழிகளோ ..?!
இறுதியில் பெருமழையோ..அது
முகிலினத்தின் வியர்வை துளியோ ..?!
சித்திரமாய் உனை நான் வரைந்தாலென்ன ..
பத்திரமாய் உனை என்னுள் மறைத்தாலென்ன ..?!
பொன்னிறமேனி சிலிரிக்குதே ...
பூவாய் நாணம் என்னுள் துளிர்க்குதே ..!!!
நனைந்தேனே உன்னால் ..பெண்மையை
என்னுள் நனைத்தேனே பெண்ணாய் ...!
சின்னஞ்சிறு மழைத்துளியே ...
என் மார்பில் ..சிதறிதெறித்த சிற்றருவியே..!
சிந்தை மறந்தேனடி ...சிரித்து மகிழ்ந்தேனடி ..
மண்ணில் பிறந்தேனடி ..மழையில் மலர்ந்தேனடி ..!




இன்றைய தலைப்பு செய்திகள் ...!

பொதுநல வழக்கொன்றில் ...
கலப்படம் ...பதுக்கல் ...கடத்தல் ..
இனி தேசத்த்ரோக குற்றங்கள்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ...!

உழைப்பாளர் சிலையே ..
இந்தியாவின் தேசிய சின்னம் ...!

உழவுத்தொழிலே ...
நம் நாட்டின் முதன்மைத்தொழில்..
உழைக்கும் விவசாயியே ...
திருநாட்டின் முதல் குடிமகன் ....!

அதிகார துஷ்பிரயோகம் ..
அதிரடி பதவி உயர்வு ...
அகதிகளாய் நாட்டில் ...!

அசையா சொத்துக்கள் ..
நேரடி விற்பனை இனி இல்லை ..
கொள்முதலும் ..விற்பனையும் ..
அரசாங்கத்தின் அலுவல்...!

லஞ்சம் குற்றமா ...
கண்களையும் ...கைகளையும் ..
கையூட்டிர்க்கு பறிகொடுத்த ..
முடவர்களுக்கு கேள்வி ..?
குடும்ப சொத்துக்கள் அனைத்தும்
பொதுவுடைமை ஆக்கப்படும் ..!

அரசியல்வாதிக்கும் ...
கல்வித்தகுதி ..
நல்ஒழுக்க சான்றிதல் ..
கட்டாய ராணுவ பயிற்சி ...
பாராளுமன்றத்தில் சட்டம் ..
ஒருமனதாக நிறைவேறியது ..!

ஆன்மீக கபடதாரிகள் ...
ஆயுளுக்கும் மலமே உணவு ..
ஆயுட்கால சிறையும் இலவசம் ...!

பாலியல் பலாத்காரங்களுக்கு ...
அடையாளம் பறிக்கப்படும் ...
ஆணா..பெண்ணா ..அறியாதவாறு ...!
ஆயுளுக்கும் கைதியாய் ...ஆளில்லா தீவில் ..!

கல்வியும் ..மருத்துவமும் ..நீதித்துறையும் ...
இனி வியாபாரிகளுக்கு இல்லை ....
விற்றால் விடும் மூச்சிற்கு
விடுதலை பெற்று தரப்படும் ..!

திடீரென கொசுகடிக்க ....
உறக்கம் கலைந்தேன் ..
அதிகாலை 4 மணிக்கு ....!

ஐயகோ கனவா இது ...?

அதிகாலை கனவு பலிக்குமாமே .....
நிஜமா யாராவது சொல்லுங்களேன் ...!?

Saturday, June 16, 2012

 அன்புள்ள அப்பா மன்னிப்பாயா ?



அன்புள்ள அப்பா ...!

உயிர் கொடுத்தாய் எனக்கு ...
என்ன கொடுத்தேன் நான் உனக்கு...?

ஈரைந்து மாதம் என் தாய் சுமந்தாள்..பின்
பருவம்வரை பத்திரமாய் சுமந்தவன் நீதானே ..!

திரியாய் எரிந்தது நீ ..
நம் வீட்டில் வெளிச்சம் ..!?

நெஞ்சுக்குள் அன்பை சுமந்து ...
நிதமும் நம் குடும்பத்தை சுமந்து ...
நீ சுமைதாங்கியே ஆனாய் ..
சுகமாய் அதையும் அனுபவித்து கொண்டே ..!?

நீ எங்கள் கதாநாயகன் ...!
நடுத்தர குடும்பத்தில் ...
கதாநாயகன் கனவுகள் மட்டுமே வானவில்லாய்..
வாழ்க்கை பயணம் ...
வரவு செலவு கணக்கிலே கரைந்துவிடும் ...!?

கல்விக்காக கண்களில் கண்டிப்பு ..
தவறிளைக்கும்போது போது தண்டித்து ..
வார்ப்படமாய் எங்களை வார்த்தாய்...
தூங்கும்போது எத்தனைதடவை ..
எங்கள் தலைகோதி கண்ணீரும் வார்த்தாய் ..!?

எங்களுக்கு ஏணி நீதான் ...அதில்
ஏற்றிவிட்டவனும் நீதான் ..
முதுமையில் நீ தடுமாறுகிறாய் ...
இளமையில் உன்கை பற்றி
நடை பயின்ற நாங்கள் ...இன்று
நாகரீக மோகத்தில் நரகத்தில் வாழ்கிறோம் ..
சொர்கத்தை தொலைத்துவிட்டு ....?!

என் குழந்தைகளுக்கு....
நானும் உயிர் கொடுத்தேன் ...
உன் உயிர் மருகுவதை மறந்து ...!?

வசதியும் ...வருமானமும் ..
கனக்கிறது அப்பா எனக்கு ...

என்னை சுமந்த உன்னை ..
முதுமையில் சுமக்காமல்
என் சுமைகளை மட்டும் ...
சுமக்கும் சுயநல சூல்நிலையாய்...!?

நீ மன்னிப்பாய் என தெரியும் ...
என் மகன் என்னை மன்னிப்பானா !?
கர்ணன் உயிர் கொடுத்தான்
தானமாய் நட்புக்கு ...!
நாமும் உயிர் கொடுப்போம்
மனித உயிர்களுக்கு ..
தானமாய் குருதி கொடுத்து ..!
வாழும்வரை ரத்த தானம் ....
வாழ்க்கைக்கு பின் உடல் தானம் !

மலரைத்தான் நேசிக்கிறோம் ..
மிருகங்களிடமிருந்து ...
மலருக்கு வேலி ...
முட்கள் எனத்தெரிந்தும் ..?!

 

  மறுபக்கம்.....

பாராட்டுகள் பாராமுகமாகும்போது ...
பார்வைகள் லாபம் ..நஷ்டம் ..பார்கின்றன ..?!

விமர்சனங்கள் விழிகளின் முன்னிலையில்
அரங்கேறுவதில் தானே நியாயம் இருக்கிறது ..?

முகத்தை கண்ணாடியில் பார்த்து பெருமைபடுவதைவிட ....
முகவரிகளை முதுகில் தைத்து முன்னுரை எழுதலாமே ..?


இந்த சமுதாயத்தில் ..முதல் பக்கத்தை..
தொலைத்துவிட்டுதானே ..மறுப்பக்கத்தை
தேடுகிறார்கள் இந்த மனிதர்கள் ....!!!


ஒவ்வொரு பக்கமும் கவனமாய்த்தான் புரட்டினேன்
முதல் பக்கத்திலிருந்த முன்னுரையை படிக்காமல் ..


அச்சமில்லாமல்தான் அச்சுக்கும் ஏற்றினேன் ...
கடைசி பக்கத்திலிருந்த முடிவுரையை படிக்காமல் ,


ஒவ்வொரு பக்கங்களிலும் என் ஏக்கத்தை வடித்தேன் ....
எழுதி முடித்தவுடன் என் தூக்கத்தை தொலைத்தேன் ...!!!


வர்ணங்கள் இல்லாமலே வானவில் தீட்டினேன் ..
கண்ணீர் மழையில்..அது கரைந்தே போனது ..!


மர்மங்கள் இல்லாமல் மனதை காட்டினேன் ..
மனிதர்கள் பிழையில் அது மாயமானது ...!


காரணம் தெரியாமலே தோரணம் கட்டினேன் ..
அர்த்தம் புரியாமலே அகராதி எழுதினேன் ..


இறுதியில் ...புத்தகம் எழுதாமலே ..
என் மறுபக்கத்தை தொலைத்துவிட்டேன் ..!?

நித்திய கண்டம் பூரண ஆயுசு..!

இவனை பார்த்த பிறகு ...
எனக்குள் இறைநம்பிக்கை அற்று விட்டது ..
இன்னமும் இவன் வாழ்கிறானே ,,,?!

ஆன்மீகமே சூனியமாய் போனது ...
அவதாரம் என்கிறானே ஐயோ ?!

பட்டறிவும் இல்லாமல் ...
படிப்பறிவும் இல்லாமல் ..
பசப்புகிரானே பரவசமாய் ...
அவன் பக்தைகளுடன் பக்தியை ...?!

காவி உடையில் ...காம பள்ளி ..
நீல படத்திற்கு காவி வண்ணம் ..?!

ஏழைகளுக்கு அருள்வாக்கு ..
எங்கிருந்து வந்தது ..இவனுக்கு
இத்தனை செல்வாக்கு ..?!

அறியாமைகளின் படையெடுப்பில்
வென்றதா ஆன்மீகபோர் ?!

இவன்தான் இறைதூதுவன் என்றால் ..
இறைவன் நமக்கு தேவையா ?!

இவன்தான் ஏழைகளின் ரட்சகன் என்றால் ..
இந்த இழிஉயிர் வாழ்வு நமக்கு தேவையா ?!

வாழ்கையில் தோற்றுபோகிறவன் ...
தோற்றங்களை ...இறைவன் என்கிறான் ...
இறுதிவரை தோன்றாமலே வீழ்கிறான் ..?!

வாழ்கையை நேசித்தவனோ ...
இயற்கையை இறைவன் என்கிறான் ..
இறந்தும் கூட இறவாமலே வாழ்கிறான் ?!

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பார்கள் ..
இந்த நித்திக்கு என்று கண்டம் ...
நமக்கு என்று பூரண ஆயுசு ?!
மனிதனின் மீதம் ...?!

ஏக்கத்தின் மீதம் ஏகாந்தம் ...
விரக்தியின் மீதம் சூன்யம்....
துயரத்தின் மீதம் அழுகைகள்...
ஆணவத்தின் மீதம் அழிவுகள் ...
 
அறிவின் மீதம் கர்வம் ....
ஆசையின் மீதம் மர்மம் ....
அனுபவத்தின் மீதம் தத்துவம் ...
வாழ்கையின் மீதம் நினைவுகள் ..
பார்வையின் மீதம் தெளிவுகள் ...
யுவதிகளின் மீதம் கவிதைகள் ....
யுதார்த்ததின் மீதம் வறுமைகள் ...
வாலிபத்தின் மீதம் தேவைகள் ...
வயோதிகத்தின் மீதம் தேடல்கள் ...
உறவின் மீதம் பிரிவுகள் ...
உரிமையின் மீதம் விரிசல்கள் ...
எதிர்ப்பார்ப்பின் மீதம் ஏமாற்றம் ..
அறியாமையின் மீதம் தடுமாற்றம் ..
கோபத்தின் மீதம் சோகம் ...
நேசத்தின் மீதம் சுகம் ...
காதலின் மீதம் கனவுகள் ....
அன்பின் மீதம் ஆனந்தம் ....
நட்பின் மீதம் நன்மைகள் ...
மனிதனின் மீதம் ......?